Ads (728x90)

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். 

இந்தச் சந்திப்பின்போது நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் பாராட்டினார். 

பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வத்திக்கான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.

இலங்கைக்கும், வத்திக்கானுக்கும் இடையிலான அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் இந்நாட்டிற்கு பல நன்மைகளைத் பெற்றுத் தந்துள்ளது என்றும், அது ஆன்மீக ரீதியானது மட்டுமன்றி, நாட்டில் மனித கண்ணியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கியமானதாக அமைந்ததாகவும் தெரிவித்த ஜனாதிபதி அதற்காக நன்றி தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget