தீபச்சுடரில் மகாலட்சுமி, ஒளியில் சரஸ்வதி, வெப்பத்தில் பார்வதி தேவி வீற்றிருப்பதாக நம்பப்படுவதால், தீப வழிபாடு முப்பெரும் தேவியரின் அருளையும் தரும்.
தீப வழிபாடு என்பது நம் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது என்றால் அது மிகையல்ல. நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வழிபட்டால் தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.
தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் ‘திருக்கார்த்திகை’ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழி படுவது மிகவும் விஷேசமானதாகும்.

Post a Comment