ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அவரது செயலாளர் கலாநிதி என்.எஸ் குமாநாயக்கவினால் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் பொது அவசரகால நிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு பொதுப் பாதுகாப்பையும், நாட்டின் சரியான செயற்பாட்டையும் உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் பொது அவசரகால விதிமுறைகள் பின்வருமாறு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டம், தேசிய அரச பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களால் திருத்தப்பட்ட (40 ஆம் அத்தியாயமாகிய) பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (Public Security Ordinance) 2 ஆம் பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், அக் கட்டளைச் சட்டத்தின் II ஆம் பாகத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இலங்கை முழுவதற்கும் இந்த அவசர நிலையை இவ்வாறு பிரகடனம் செய்துள்ளார்.

Post a Comment