Ads (728x90)

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி கடற்கரைப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இவர்களில் 09 பொது மக்களும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஒருவரும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் மீதும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றைய நபர் காயமடைந்துள்ள நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டாய் கடற்கரைப் பகுதியில் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget