திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அனர்த்தத்தின் போது கடற்படையினர் ஆற்றிய பங்கு மகத்தானது. குறிப்பாக கலா ஓயாவில் கூரை மேல் மரண பயத்தை அனுபவித்த மக்களுக்கு நம்பிக்கை அளித்து இழக்கப்படவிருந்த ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிய கடற்படையினரின் பணியை நன்றியுடன் பாராட்டினார்.2024/03 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 08 அதிகாரிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 33 அதிகாரிகள் மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 65 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 28 அதிகாரிகள் இங்கு பயிற்சியை முடித்து வெளியேறிச் சென்றனர்.
பயிற்சி காலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய இடைநிலை அதிகாரிகளுக்கு விருதுகளையும், அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு கௌரவச்சின்னமாக வாள்களையும் ஜனாதிபதி வழங்கினார்.


Post a Comment