கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்கச் செயலாளர் ரன்தீப் சராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக 1.4 மில்லியன் டொலர் உலக உணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 'வேர்ல்ட் விஷன் கனடா' அமைப்புக்கு 350,000 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்காலிக கூடாரங்கள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.
அதேநேரம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப் பணிகளுக்காக இந்த நிதியில் 215,000 டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment