Ads (728x90)

தற்போதைய நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சினர் முயற்சிக்க கூடாது என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

களனி ரஜமஹா விகாரையில் நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு என்ற ரீதியில் நாம் தற்போது மிக மோசமான இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு அரசியல் வேறுபாடுகளின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சினர் முயற்சிக்க கூடாது. 

ஒரு சிலர் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கிறார்களே தவிர அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget