கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தில் 40 பாதைகளில் 25 பாதைகளின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்தாகவும், ஊவா மாகாணத்தில் சேதமடைந்துள்ள 22 வீதிகளில் 17 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், சப்ரகமுவ மாகாணத்தில் சேதமடைந்துள்ள 36 வீதிகளில் 32 வீதிகளும், வடமத்திய மாகாணத்தில் 15 வீதிகளில் 12 வீதிகளும், வடமேல் மாகாணத்தில் சேதமடைந்த 58 வீதிகளில் 56 வீதிகளும், வடக்கில் சேதமடைந்த 34 வீதிகளில் 32 வீதிகளும், மேல் மாகாணத்தில் சேதமடைந்த 67 வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் சேதமடைந்த 3 வீதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் சேதமடைந்த 24 வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
வீதிகள் தவிர சுமார் 40 பாலங்களும் சேதமடைந்தன. அவற்றில் 40 பாலங்கள் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும் 10 பாலங்களின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன என்றும், மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் சேதமடைந்த இரணைவில் பாலத்திற்குப் பதிலாக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வழங்கப்பட்ட புதிய பெயிலி பாலம் (Bailey Bridge) அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment