அந்த மக்களுக்காக பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்வரும் வாரத்தில் இந்தத் தரவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும், ஆய்வுகளின் முடிவுகளுக்கு அமைய இந்தத் தரவுகள் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தித்வா புயல் காரணமாக நாடு முழுவதும் 1,200 இற்கும் மேற்பட்ட பாரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதன்படி கண்டி மாவட்டத்தில் 363 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 162 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 219 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும் குருநாகல் மாவட்டத்தில் 89 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், கேகாலை மாவட்டத்தில் 79 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், பதுளை மாவட்டத்தில் 312 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன என்றார்.

Post a Comment