Ads (728x90)

2025ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருடாந்த வருவாய் இலக்கான 2,203 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இந்த இலக்கை எட்டியதாகவும், திணைக்களத்தின் வரலாற்றிலேயே ஈட்டப்பட்ட மிக உயர்ந்த வருவாய் இது எனவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பி. எச். பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இதனை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த வரலாற்றுச் சாதனைக்குத் தங்களது வரிப் பங்களிப்பின் மூலம் ஆதரவளித்த வரி செலுத்துவோருக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திணைக்கள ஊழியர்கள் மற்றும் ஏனைய அரச, தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget