அந்த வகையில் அமெரிக்காவின் 36 ஆவது அவசர படையணியின் CGR- ‘C -130J’ சுப்பர் ஹர்கியூலிஸ் ரக விமானங்கள் இரண்டு நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
தித்வா புயல் அனர்த்தத்திற்கான இலங்கையின்பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக் குழுவினைச் (CRG) சேர்ந்த விமானப் படை வீரர்களும் கட்டுநாயக்க விமானத்தளத்தினை வந்தடைந்துள்ளனர்.
இக்குழுவினர் வருகை தந்தபோது அவர்களை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருன ஜயசேகர ஆகியோர் வரவேற்றனர்.குவாமிலிருந்து செயற்படும் 36ஆவது CRG மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரர்கள், இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு உடனடி போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் உதவிகளை வழங்குவார்கள் என அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.


Post a Comment