இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் கப்பல் பணிக்குழுவினரை வரவேற்றதோடு நிவாரணப் பொருட்களையும் பொறுப்பேற்றனர்.
தொடர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்த நிவாரணப் பொருட்களை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் உத்தியோகப்பூர்வமாகக் கையளித்துள்ளார்.
தமிழக மாநில அரசினால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நிவாரணப்பொருட்களுடன் சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் உட்பட சுமார் 1,000 தொன் நிவாரணப் பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

22.jpg)
Post a Comment