Ads (728x90)

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு 2001ஆம் ஆண்டு குறித்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் 15 T-56 ரக துப்பாக்கிகளும், 9 மில்லிமீட்டர் ரக 05 துப்பாக்கிகளும் வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட 1500 இற்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் மற்றும் 100இற்கும் மேற்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் சென்றிருந்த போது கைது செய்யப்பட்டார்.

2001ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் கைத்துப்பாக்கி திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மாகந்துரே மதூஷ் வழங்கிய தகவலுக்கு அமைய 2019 ஆம் ஆண்டு வெலிவேரியவில் கால்வாய்க்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையின் பின்னரே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget