கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தோற்கடிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட பெருமளவிலான திட்ட முன்மொழிவுகள் உள்வாங்கப்பட்டிருந்தன. உள்ளூராட்சி மன்றங்களினூடாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகளைச் சிறந்த முறையில் வழங்குவதற்காகவே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அதன்படி, வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு உறுப்பினர்கள் வாக்களிப்பது, அவர்களை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக்குவதற்கு வாக்களித்த மக்களுக்கு எதிராகச் செயற்படுவதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
.jpg)
Post a Comment