இதில் யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது.
பயணிகள் முனைய கட்டிடம் அமைப்பதற்கான இரண்டு கட்டங்களுக்கும் எதிர்பார்க்கப்படும் மொத்த முதலீடு ஏறத்தாள 700 மில்லியன் ரூபா ஆகும் என சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.இதேவேளை இதன் இரண்டாம் கட்டத்திற்கான வேலைகள் ஜனவரி 2026 இல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment