இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய சுமார் 200 மெட்ரிக் தொன் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் இன்று கொழும்பு துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஸீஸினால் கையளிக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களை அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு ஆகியோர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், போர்வைகள், உயிர் காக்கும் அங்கிகள், படகுகள், நீர் வெளியேற்றும் பம்பிகள், மருந்துப் பொருட்கள், பால் மா உள்ளிட்டவை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இவை வழங்கப்பட்டுள்ளன.

Post a Comment