இத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் 1,170 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின்படி விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 04 தானியங்கி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் ஊடாக பயணிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
இதன்மூலம் வருகை மற்றும் வெளியேறு முனையங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியான தானியங்கி முறையை பின்பற்றுவதன் மூலம், பயணிகளைச் சோதனையிடும் நடவடிக்கைகளில் அதிக துல்லியம் மற்றும் வேகத்தை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நுழைவாயில்கள் கடவுச்சீட்டை ஸ்கேன் செய்து, முக அங்கீகாரத் தொழில்நுட்பம் மூலம் ஆவணங்களைச் சரிபார்க்கின்றன. இதனால் விமான நிலையத்தின் செயல்திறன் அதிகரிக்கிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான எல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment