Ads (728x90)

அமெரிக்காவின் 'U.S. News & World Report' அறிக்கையின்படி ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தப் பட்டியலில் ஜப்பானின் புஜி மலை முதலிடத்தில் உள்ளதுடன், அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸின் பலவான், டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் உள்ளன. 

அணுகுவதற்கான வசதி, உள்ளூர் விலைகள், சுற்றுலாத் தலங்கள், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பம் ஆகிய காரணிகளைக் கருத்திற்கொண்டு தரவு பகுப்பாய்வு மூலம் இந்தத் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கை, ஆசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள், மழைக்காடுகள், கடற்கரைகள் மற்றும் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. 

”இலங்கையில் 26 தேசிய பூங்காக்கள் உள்ளன, அவற்றில் பல யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகளைப் பார்ப்பதற்கான சவாரி பயணங்களுக்குப் பொருத்தமானவை. 

இதற்கிடையில் 600 அடி உயரக் கோட்டையான சிகிரியா மற்றும் பொலன்னறுவையின் விகாரைகள், கோயில்கள் போன்ற பண்டைய இடங்கள் அதன் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கின்றன. 

தென்னை மரங்களால் சூழப்பட்ட பொன்னிறக் கடற்கரைகள், அமைதியான விடுமுறையைத் தேடுபவர்களுக்கு வெகு தொலைவில் இல்லை" என அந்த அறிக்கையில் இலங்கை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget