Ads (728x90)

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் பதிவு செய்யும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று முற்பகல் 9.00 மணிக்கு தொழிலாளர் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இன்று முதல் இச்சேவைகள் இணையவழியில் முன்னெடுக்கப்படும் என தொழிலாளர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய நிதிய சேவைகளை ஆன்லைனில் அணுகவும், நிர்வகிக்கவும் வழிவகுக்கிறது,


Post a Comment

Recent News

Recent Posts Widget