Ads (728x90)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 3ஆவது தளம் உத்தியோகபூர்வமாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இது துறைமுகத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிகழ்வில் Maersk, CMA CGM மற்றும் MSC போன்ற உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கொழும்பு துறைமுகத்தின் நம்பகத்தன்மை மற்றும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சி மீது சர்வதேச நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இவர்களின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது. 

2025 ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையாத நிலையிலும் இந்த முனையம் 5 இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது என இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஓய்வுபெற்ற தலைவர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க கருத்து தெரிவித்துள்ளார். 

தற்போது மூன்றாவது தளம் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியத் துணைக்கண்டம் மற்றும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் ஒரு பிரதான பரிமாற்ற மையமாக கொழும்பு துறைமுகம் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் பெப்ரவரி நடுப்பகுதியில் முழுமையாக நிறைவடையும் எனவும், அதன் பின்னர், அனைத்து செயல்பாட்டு அமைப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த ஆண்டில் 15 இலட்சம் TEU கொள்கலன்களைக் கையாளும் இலக்கை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget