Ads (728x90)

சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்திலுள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இட்டு அழிக்கும் நடவடிக்கை, நேற்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இடம்பெற்றது. 

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, கடற்படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு, பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் ஆகிய போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டன. 

குறித்த போதைப்பொருட்கள் தொகை தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து, அவற்றை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அதற்கமைய, இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து போதைப்பொருள் தொகை பொறுப்பேற்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வனாத்தவில்லுவ பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அழிக்கப்பட்டது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget