Ads (728x90)

நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தையிட்டி விகாரை பகுதிக்கு இன்று நேரடி விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி இராணுவத்தினரால் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாராதிபதி அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். 

இதன் ஒரு கட்டமாக தையிட்டிக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாராதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பற்றை வளர்ந்திருந்த காணியையும் பார்வையிட்டு சென்றுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget