யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ”முழு நாடுமே ஒன்றாக”தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் மாத்திரமன்றி, அதற்கு ஆளான பிள்ளைகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்பயிற்சி வழங்கி, கிராமத்திற்கும் நாட்டிற்கும் பயன்மிக்க பிரஜைகளாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டமாகும் என்றும் தெரிவித்தார்.நாட்டில் முதல் முறையாக தெற்கு மற்றும் வடக்கு மக்களால் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரத்தை இழந்த இனவாத குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சித்தாலும், நாட்டில் மீண்டும் எந்த இனவாத போக்கும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார்.
இந்த போதைப் பொருளின் ஊடாக பெறப்படும் பெருந்தொகையான பணம் எமது அரச பொறிமுறையை ஆக்கிரமித்துள்ளது. சிறைச்சாலைகளுக்குள் கைதானவர்கள் இந்த வர்த்தகத்தை செய்கின்றனர். பொலிஸார் சிறந்த சேவையை செய்யும் நிலையில் ஒரு சிலர் இதில் சிக்கியுள்ளனர். சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் என்பவற்றில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் இதற்குள் அகப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி அரச சேவையிலுள்ள முக்கிய இடங்களில் இந்த அச்சுறுத்தலில் சிக்கியுள்ள அதிகாரிகள் உள்ளனர்.இந்த போதைப் பொருள் வர்த்தகத்திற்கு அரசியல் பாதுகாப்பு பிரதானமான காரணமாக இருந்தது. சில பிரதேசங்களில் உள்ள அரசியல்வாதிகள் போதைப் பொருளை அடையாளப்படுத்தி அழைக்கப்பட்டனர். ஆனால் தற்போது அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்காத அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம்.
சில சமயங்களில் இதனை தடுப்பதற்காக உள்ள நிறுவனங்களின் பிரதானிகள் கூட இத்தகையோருடன் தொடர்பு வைத்திருந்தனர். கைது செய்யப்பட வேண்டிய நபரை விடுதலை செய்யும் வகையில் சாட்சியங்கள் தயார்படுத்தப்பட்டன. சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிறுவனங்களின் பிரதான கதிரைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு உள்ளது.பொருமளவான இளைஞர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். ஏனைய பெற்றோர்களைப் போலவே அவர்கள் மீதும் பெற்றோர் அன்பு செலுத்தினார்கள். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். இது எந்த வகையிலும் பின்வாங்கும் முன்னெடுப்பல்ல. வடக்கு இளைஞர்கள் ஒரு காலத்தில் யுத்தத்தில் சிக்கி பெரும் அழிவைச் சந்தித்தனர். பெற்றோர் தமது பிள்ளை குறித்து சந்தேகத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டது.
இதனை தோற்கடிப்பதில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையும் உறுதியாக உள்ளனர்.
உங்கள் பிள்ளை இறையாகும் வரை காத்திருக்க வேண்டாம். அச்சுறுத்தல் உங்கள் வீட்டின் கதவு வரை வந்துள்ளது. கதவை மூடிவைப்பதால் எந்தப் பயனுமில்லை. அது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடும். பிள்ளையை எந்தளவு பாதுகாத்தாலும் சமூகத்தில் அந்த அச்சுறுத்தல் இருந்தால் உங்கள் முயற்சியால் பயன் ஏற்படாது. எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இந்த போதைப் பொருளை முற்றாக ஒழிப்போம். அதற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என்றார்.



Post a Comment