Ads (728x90)

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமாரவை அவதூறாக சித்தரித்ததாகக் கூறி ஹிரு, தெரண ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களிடம் தலா 1.5 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி ஷாந்த பத்மகுமாரவின் சட்டத்தரணியால் சட்டரீதியாக கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமாரவின் சட்டத்தரணியான லா சம்பத் யலேவத்த மூலம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், 2025 டிசம்பர் 16 ஆம் திகதியளவில் தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு செய்தியில் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலம், மேற்குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையதாக சித்தரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் 2025 டிசம்பர் 17ஆம் திகதி மாலை 6.55 மணி செய்தி ஒளிபரப்பில் SJB நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வெளியிட்ட, “கஞ்சா செடிகள் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமாருக்குச் சொந்தமான நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன”என்ற கூற்று, உரிய சரிபார்ப்பு இன்றி ஒளிபரப்பப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று 2025 டிசம்பர் 16ஆம் திகதியளவில் ஹிரு தொலைகாட்சியில் ஒளிபரப்பான விளம்பர செய்திப் பகுதியிலும், குறித்த கஞ்சா விவகாரத்துடன் தொடர்புடைய நிலம், நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமாருடன் இணைக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஒளிபரப்புகள் மூலம் தனது கௌரவத்திற்கும், அரசியல் புகழுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, தலா 1.5 பில்லியன் ரூபா இழப்பீடு வழங்காவிட்டால், ஏழு நாட்களுக்குள் மேலதிக அறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget