Ads (728x90)

இலங்கையில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. 

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 தித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு சில பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget