Ads (728x90)

நாட்டில் சில வருடங்களுக்கு முன் இனவாதத்தைக் தூண்டி தவறான கருத்துக்களை மக்கள் மயப்படுத்திய சில பேராசிரியர்கள் இன்று கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களில் முக்கிய நடிகர்களாக வலம் வருவதாக பிரதியமைச்சர் முனீர் முழப்பர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இவ்வாறான பேராசிரியர்களா எமது நாட்டின் எதிர்கால சந்ததிகளான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது? கல்வி சீர்திருத்தம் பற்றி பேசுவது? எனக் கேட்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு முன்பதாக இத்தகையோரின் மனங்களை புனரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில், பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர், வெளிப்படையான மனதுடன் பிள்ளைகளுக்கான கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு இனவாதமில்லாத, மதவாதத்தை தூவாத அனைவரையும் நேசிக்கக் கூடிய அனைத்து மதங்களையும் கௌரவப்படுத்தும் மனதுடையோரே அவசியம்.

ஒவ்வொருவரையும் இலக்கு வைத்து அவர்கள் சுயத்தை கொலைசெய்கின்ற நபர்களே, பிள்ளைகளின் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது குரல் எழுப்பி வருகின்றனர். எமது நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் ஊடகங்கள் மூலம் கர்ப்பப்பை போராட்டத்தை மேற்கொண்டவர்களே, இவ்வாறு செயற்படவில்லை என அடிக்கடி இப்போது கூறி வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget