பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் தெரிவிக்கிறார்கள். கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ஜகத் விதாரண ஆகியோர் மதுகமவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
கல்வி ஆபாசமாக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார். 6ஆம் தர புத்தகத்தில் எந்த இடத்தில் ஆபாசம் உள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட வேண்டும்.
அதேபோல் பல நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள பாடப்புத்தகத்தை பார்க்கும் போது தன்பாலின உணர்வு எவ்வாறு தோன்றுகிறது என்பதையும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட வேண்டும். பாடப்புத்தகத்தில் இரண்டு ஆண் பிள்ளைகள் கைகோர்த்து உரையாடிக் கொண்டிருக்கும் படத்தை பார்த்தாலும் இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
வானவில்லை பார்த்தால் பிள்ளைகளுக்கு தன்பாலினத்தவர்கள் நினைவுக்கு வருவார்கள் என்று உதய கம்மன்பில குறிப்பிடுகிறார். இவர்களிடம் தான் பிரச்சினைகள் உள்ளன. மாறுப்பட்ட பாலியல் உணர்வு உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினருக்கு தான் பிரச்சினை உள்ளது. மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஆபாசம் என்று குறிப்பிட்டுக் கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தவறான நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் தான் தோற்றுவித்தார்கள். எதிர்க்கட்சியினர் தான் மாறுப்பட்ட வகையில் செயற்படுகிறார்கள். இவர்களுக்கு சார்பாக உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, கீர்த்தி தென்னக்கோன் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளார்கள். நாமல் ராஜபக்ஷவும் இவர்களின் கூட்டணியில் உள்ளார்கள். வெட்கமில்லாமல் இலவச கல்வி பற்றி பேசுகிறார்கள்.
பேசுவதுக்கு ஏதும் இல்லாவிடின் ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டு அலைகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் கடந்த வாரம் தர்மச்சக்கரம் பற்றி பேசினார். அந்த விடயத்தை தெளிவுப்படுத்தியதன் பின்னர் அமைதியாக உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது அரச நிகழ்வுகளுக்கு பயன்படுத்திய தர்மச்சக்கரம் தான் புதிய பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் கட்சிகளும் கைச்சாத்திடவில்லை. நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க 20 பேர் கைச்சாத்திட்டால் போதும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இன்னும் கையொப்பம் பெறுகிறார் என்று தெரியவில்லை. ஆகவே தயவு செய்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள் அப்போது பல விடயங்களை வெளிப்படுத்துகிறோம்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தரப்பினருக்கு எதிரான செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாகவே தயாசிறி ஜயசேகர அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான சிறிதரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற நிலையில் தான் ஒரு தரப்பினர் அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறது என்று போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை இல்லாதொழிப்பார்கள். புதிய கல்வி மறுசீரமைப்பில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளை திருத்திக் கொண்டு 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தும் வகையில் புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவோம் என்றார்.

Post a Comment