இந்த குடியிருப்புத் திட்டமானது பொறியியல் மற்றும் கட்டுமானத்துறையில் 45 ஆண்டுகால நீண்டகால வரலாற்றைக் கொண்ட ICC நிறுவனத்தின் பின்புலத்துடன், ஐ.சி.சி போர்ட் சிட்டி (ICC Port City (Pvt) Ltd) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.
இத்திட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் 500,000 அமெரிக்க டொலர்கள் முதல் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு 68-72 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு படுக்கையறை குடியிருப்புகள் முதல் 306-515 சதுர மீற்றர் வரையிலான 4 படுக்கையறைகளைக் கொண்ட சொகுசு குடியிருப்புகள் வரை நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் ஐ.சி.சி (ICC) நிறுவனத்தின் தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர், மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், CHEC போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தின் அதிகாரிகள், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர், திட்டத்தின் கட்டடக் கலைஞர் மற்றும் நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் எனப் பல பிரமுகர்கள் முன்னிலையில் இந்த ஆரம்ப விழா நடைபெற்றது.
Post a Comment