நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் இந்தச் சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தச் சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் சட்டமானதும் இந்நாள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு செலுத்தல் இடை நிறுத்தப்படும். அரச ஊழியர்கள் 35 வருடத்துக்கும் அதிகமான காலம் அரச சேவையில் இருந்து ஓய்வூதியம் பெறுகின்ற நிலையில் அரசியல்வாதிகள் 5 ஆண்டுகள் பதவியில் இருந்து ஓய்வூதியம் பெறுவது முறையற்றது என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Post a Comment