Ads (728x90)

பித்ரு தோஷம் என்பது, முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யாததாலோ அல்லது அவர்கள் ஆத்மா சாந்தியடையாததாலோ, அவர்களின் வம்சத்தினருக்கு ஏற்படும் ஒரு சாபம் அல்லது தோஷம் ஆகும்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும்.

உங்கள் ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு-கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும்.

ராகுவுடன் சூரியனும், சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பித்ருக்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர்.

பிதுர் தோஷம் தன்னையும், தன் குடும்பத்தையும், குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும்.

இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது.

பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும்.

அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் பித்ரு தோஷம் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுக்காவிட்டாலும் பித்ரு தோஷம் வரும்.

இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது. 

பித்ரு தோஷங்கள் குடும்பத்தில் இருந்தால், குடும்பத்தில் சின்ன சின்ன மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் உண்டாகும்.

பொருளாதார கஷ்டங்கள் ஏற்படும். சின்ன சின்ன விபத்துக்கள் ஆகியவை உண்டாகும். இதுபோன்ற எதிர்மறை ஆற்றல்கள் தாக்காமல் இருக்க பரிகாரங்கள் செய்தல் அவசியம்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget