தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாக 200 ரூபா வருகைக்கான கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.
இந்த வேதன உயர்வு தொடர்பான உடன்படிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடையில் நாளை காலை அமைச்சில் கைச்சாத்திடப்படவுள்ளது.
இது தோட்டத் தொழிலாளர்களின் 200 ஆண்டுகால வரலாற்றில் வழங்கப்பட்ட அதிகூடிய வேதன உயர்வு என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
Post a Comment