Ads (728x90)

6 ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பாட அலகு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை 6 ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாட அலகை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளதாக நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையிலான குழுவை நியமிப்பதற்கு, தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பொருத்தமற்ற வலைத்தள முகவரி தொடர்பில், தேவையற்ற பிரசாரங்களை தவிர்க்குமாறும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget