Ads (728x90)

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை யூடியூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் மோகன் வெளியிட்டுள்ளார். 

இனி படைப்பாளர்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு 'AI உருவத்தை' உருவாக்கி அதன் மூலம் குறுங்காணொளிகளைத் தயாரிக்க முடியும்.

இது AI நிறுவனத்தின் 'Sora' செயலி போன்ற ஒரு தொழில்நுட்பமாகும்.  வெறும் எழுத்து வடிவிலான கட்டளைகளை வழங்குவதன் மூலம் இந்த காணொளிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

AI என்பது படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இருக்குமே தவிர, அவர்களைப் பதிலீடு செய்யும் ஒன்றாக இருக்காது என்று நீல் மோகன் உறுதியளித்துள்ளார். 

வெறும் எழுத்துக்கள் மூலம் சிறிய கேம்களை உருவாக்குதல் மற்றும் இசையில் புதிய சோதனைகளைச் செய்தல் போன்ற வசதிகள் புதிதாக உட்புகுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் (Instagram Reels) உள்ளது போல, இனி யூடியூப் ஷார்ட்ஸ் பகுதியிலும் புகைப்படங்களை பதிவேற்றலாம். 

படைப்பாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவரது அனுமதியின்றி அவரது உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான (Deepfake) காணொளிகளை கண்டறிந்து அகற்றும் தொழில்நுட்பத்தையும் யூடியூப் பலப்படுத்தி வருவதாகவும் நீல் மோகன் தெரிவித்துள்ளார்


 

Post a Comment

Recent News

Recent Posts Widget