வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் உருவெடுத்து வரும் வேலைவாய்ப்புச் சவால்களை எதிர்கொள்வதற்குத் திறன் அபிவிருத்தி (Skills Development), புத்தாக்கமான வேலைவாய்ப்பு மாதிரிகள் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவை எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது வேலை என்பது எவ்வாறு வரையறுக்கப்படுகின்றது மற்றும் மதிப்பிடப்படுகின்றது என்பது குறித்து நாம் மீண்டும் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.குறிப்பாக சமூகங்களின் நிலைத்தன்மைக்கும், சமூக ஒருமைப்பாட்டிற்கும் வலுச்சேர்க்கும் முறைசாரா உழைப்பு மற்றும் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது இறுதியில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். எமது பொருளாதாரத் திட்டமிடலானது மென்மேலும் உள்வாங்கத்தக்க, மக்களை மையப்படுத்திய அணுகுமுறைகளின் ஊடாக அந்த நோக்கத்தைப் பிரதிபலிக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.


Post a Comment