Ads (728x90)

வெனிசுவேலாவில் ஜனநாயகம் மலரவும், நிக்கோலஸ் மதுரோவின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் "மனிதநேயத்திற்கான ஒரு மிகப்பெரிய மைல்கல்" என வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான மரியா கரினா மச்சாடோ தெரிவித்துள்ளார். 

நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு முழுத் தகுதியுடையவர் எனவும், கடந்த 2025ஆம் ஆண்டு தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

"ட்ரம்ப் செய்துள்ள காரியங்கள் உலகிற்கு ஒரு வலுவான செய்தியைச் சொல்லியுள்ளன. அவர் இந்தப் பரிசைப் பெறுவதற்கு முழு உரிமையுடையவர் என்பதை அவரது செயல்கள் நிரூபித்துள்ளன" எனவும் தெரிவித்துள்ளார். 

வெனிசுவேலா மக்கள் சார்பாக ட்ரம்ப்பின் துணிச்சலான முடிவுகளுக்குத் தான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட தலையீடு காரணமாகவே வெனிசுவேலாவில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்பட்டதாக மரியா கரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

மரியா கொரினா மச்சாடோ வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், தொழில்துறை பொறியாளரும் ஆவார். இவர் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். வெனிசுலாவின் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஜனநாயகத்தை மீட்டெடுக்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget