Ads (728x90)

அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்துணவை வழங்கும் நோக்கில் இன்று ஒரு விசேட முன்னோடித் திட்டம் மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றின் இணைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.

உணவை பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் நோயாளிகளுக்கு ஏற்படும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மஹரகம வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் சுமார் 2,000 நோயாளிகளுக்கான உணவு மற்றும் பானங்களை தயாரிக்கக்கூடிய நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த சமையலறையும் இத்திட்டத்துடன் இணைந்து இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

நவீன முறையில் உணவு மற்றும் பானங்களை தயாரித்து பரிமாறுவதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த முன்னோடித் திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு விரிவுபடுத்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget