குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களைக் கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் இவர்கள் டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment