Ads (728x90)

இலங்கைக்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதியால் 20 மஹிந்திரா ஸ்கோர்பியோ வாகனங்கள், பயிற்சி சிமுலேட்டர்கள் மற்றும் 2 அம்பியூலன்ஸ்கள் உத்தியோகப்பூர்வமாக அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தந்தார்.

வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவால் வரவேற்கப்பட்டதோடு, இந்திய இராணுவ பிரதானிக்கு இலங்கை இராணுவ படையினரால் சம்பிரதாயங்களுக்கமைய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் பல்லூடக மண்டபத்தில் இந்திய மானியத்தின் கீழ் இராணுவப் போர் கல்லூரியில் இந்திய-இலங்கை விளையாட்டு வளாகத்திற்கான பரிமாற்றக் கடிதங்களில் கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து அனர்த்த நிவாரண குழுக்களின் உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையை அங்கீகரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் இந்திய இராணுவ பிரதானி கலந்து கொண்டார். 

பின்னர் இரு இராணுவத் தளபதிகளுக்கும் இடையிலான வலுவான பரஸ்பர பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில், 20 மஹிந்திரா ஸ்கோர்பியோ வாகனங்கள், பயிற்சி சிமுலேட்டர்கள் மற்றும் 2 அம்பியூலன்ஸ்களை உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget