தித்வா சூறாவளி அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பொது பாதுகாப்பை குறிக்கோளாகக் கொண்டு பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
பொது அவசரநிலை காரணமாக பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக, அவசரகால நிலையை நீடிப்பது பொருத்தமானது எனத் தாம் கருதுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment