இந்தியாவின் 2026 - 2027 நிதியாண்டிற்கான மத்திய அரசிற்கான பாதீட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 9 முறை பாதீட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்திற்கான முன்னுரிமைகளை வகுத்து, உலகளாவிய நிலையற்ற சூழலுக்கு மத்தியில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக உறுதியளித்ததால், இந்தியாவின் ஆண்டு பட்ஜெட் நாட்டின் உற்பத்தித் துறைக்கு ஒரு புதிய உத்வேகம் எட்டியுள்ளது.
அடுத்த நிதியாண்டிற்கான பாதீட்டு, குறிப்பாக உற்பத்தித் துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், வலுவான நிதித் துறையை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடுகளை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Post a Comment