கெஹெல்பத்தர பத்மேயுடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே எனது ஊரைச் சேர்ந்த ஒருவர். அவர் அரசியல் ரீதியாக எம்முடன் தொடர்பு கொண்டு செயற்பட்டாரா என்பது தொடர்பில் விசாரிப்பதற்காகவே குற்றப் புலனாய்வு திணைக்களம் எனக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அவரது தந்தையுடனேயே நெருங்கிய அரசியல் உறவு இருந்ததாகவும், கெஹெல்பத்தர பத்மே எம்முடன் பெரிதாக தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

Post a Comment