Ads (728x90)

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு 12.00 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து கிண்ணம்  பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையிலும், 4.25 மணிக்கு நல்லூர் கந்தன் ஆலயத்திலும், 6.20 மணிக்கு துரையப்பா விளையாட்டு அரங்கிலும், 6.40 மணிக்கு யாழ்ப்பாணம் கோட்டையிலும், 7.10 மணிக்கு யாழ்ப்பாணம் நூலகத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் கடந்த 21ஆம் திகதி அன்று உலகக் கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, உலகக் கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget