Ads (728x90)

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 'கொண்ட ரஞ்சி', கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget