அதிகாலை நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணியளவில் நல்லூர் கந்தன் வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதரமாய் தேருக்கு எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தேர் வீதியுலா வந்து, காலை 9.15 மணிக்கு இருப்பிடத்தை அடைந்தது.
நீண்ட தூரங்களில் இருந்து வந்த பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவுசெய்யும் பொருட்டு காவடிகள், பாற்செம்பு, கற்பூரச் சட்டிகளை ஏந்திவந்த காட்சிகள் வீதியெங்கும் பரவசமாக இருந்தன.
கந்தனின் தேருலாக் காட்சியைக் காண வந்த பக்தர்களுக்கு தாக சாந்தியை பல்வேறு இடங்களிலும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அடியவர்கள் வழங்கிய அதேவேளை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment