Ads (728x90)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது.

தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர்.

இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.

கோவிலில் ஸ்படிக லிங்க பூஜைக்கென தனி கட்டணம் உண்டு அதிகாலையில் எழுந்து 21 தீர்த்தங்களிலும் நீராடி இந்த ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டால் திருமணம், குழந்தையின்மை, முன்னோர் சாபம், உள்ளிட்டவைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தீர்த்த யாத்திரைக்கு பெயர் பெற்ற இக்கோவிலில் இந்த ஸ்படிக லிங்க பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிகாலையில் இந்த ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொள்வதற்க்கு அதிக மக்கள் கூட்டம் வரும். பாவங்கள் நீக்கும் ஸ்படிக லிங்க பூஜையில் நாமும் கலந்து கொண்டு நற்பேறை அடையலாம்

Post a Comment

Recent News

Recent Posts Widget