இதனால், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சிம்பு இருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’ மற்றும் ‘பில்லா 2’ படங்களைத் தொடர்ந்து, ‘பில்லா 3’ படத்தை சிம்புவே இயக்கி, நடிக்கப் போகிறார் என்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்னொரு பக்கம், பாதியிலேயே நின்றுபோன ‘கெட்டவன்’ படத்தைத் தூசு தட்டி எடுக்கிறார் என்கிறார்கள். இதுகுறித்து சிம்பு தரப்பில் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், ‘வனமகன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சாம் பால் வில்லனாகவும், ‘ஆரம்பம்’ படத்தில் ‘அழகிய தமிழச்சி’யாக ஆடிய அக்ஷரா கவுடா ஹீரோயினாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.

Post a Comment