Ads (728x90)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படம் ரிலீஸாகும் தினத்தில் வேறு சில படங்களும் ரிலீஸாவதால், போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.    
 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படமும், அன்றுதான் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபு தமிழில் முதன்முறையாக அறிமுகமாகும் இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், பாலா இயக்கிவரும் ‘நாச்சியார்’ படமும் அதே நாளில் வெளியாவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஜோதிகா ஹீரோயினாக நடித்துவரும் இந்தப் படத்தில், ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கும் சூழலில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படி பெரிய படங்கள் சிவகார்த்திகேயன் படத்துக்குப் போட்டியாக அமைந்துள்ளதால், அவர் படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget