இதை தொகுத்து வழங்கும் கமல் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என சொல்லியிருப்பார். ஆம். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு கேமிரா நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறது என எண்ணங்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி பிக் பாஸ் கூறிவதை கேட்டு உண்மையாக நடந்து கொள்ளவேண்டும்.
ஏற்கனவே தல அஜித் ஒரு விஷயத்தை தன்னுடன் பணியாற்றிய நடிகர் தம்பி ராமையாவிடம் கூறியுள்ளார். அது என்ன விஷயம் என்றால், கேமிரா இருக்கிறது என்பதற்காக நடிக்க மாட்டேன். நம்மையெல்லாரையும் சேர்த்து மேலே ஒரு கேமிரா பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆக அஜித் பிக் பாஸையே மிஞ்சி விட்டார் என்ற செய்தி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Post a Comment