Ads (728x90)

 கிழக்கு சீன கடலில், சர்வதேச வான் பகுதியில் பறந்து சென்ற, அமெரிக்க கடற்படை கண்காணிப்பு விமானத்தை, சீனாவின் இரண்டு போர் விமானங்கள் வழிமறித்ததால்,
பரபரப்பு நிலவியது.

ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன், சமீபகாலமாக, சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. சீன கடல் பகுதியை, அந்நாடு சொந்தம் கொண்டாடி வருவதற்கு, அந்த கடல்
பகுதியின் எல்லையில் உள்ள, பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து

வருகின்றன.இந்நிலையில், சீன கடல் பகுதியில், சர்வதேச வான் பகுதியில், அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பு விமானம், பறந்து சென்ற போது, சீனாவின், ஜே - 10 வகை, போர் விமானங்கள் இடைமறித்தன. மோதுவதை போல், மிக அருகில் சீன விமானங்கள் வந்ததால், அமெரிக்க விமானத்தின் விமானி, சாமர்த்தியமாக விமானத்தை ஓட்டி, மோதல் ஏற்படுவதை தவிர்த்தார்.சீனாவின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான, பென்டகன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்வதேச வான் பகுதியில் சென்ற, அமெரிக்க கடற்படை விமானத்தை, சீன போர் விமானங்கள் இடைமறித்தது, கண்டனத்துக்கு உரியது' என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget