Ads (728x90)

கணினிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படம், வீடியோ மற்றும் இதர முக்கிய தகவல்களை தவறுதலாக அழிப்பது சாதாரண ஒன்று தான். எனினும் கணினியின் ரீசைக்கிள் பின்னில் இருக்கும் தகவல்களை மிக சுலபமாக மீட்க முடியும். சில சமயங்களில் தரவுகள் இருப்பதை முறையாக பார்க்காமல் ரீசைக்கிள் பின்னில் இருக்கும் தகவல்களையும் முழுமையாக அழித்து விடுவோம்.

அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற தவறைுகளைத் தொடர்ந்து, மிக முக்கிய தகவல்களை மீட்பது பலருக்கும் சிக்கலான காரியமாகவே தெரிகிறது. இவ்வாறு கணினியில் நிரந்தரமாக அழிக்கப்பட்ட தரவுகளை மீட்க இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்களே போதுமானது. இங்கு அழிந்த தகவல்களை மிகச்சிறப்பாக மீட்க வழி செய்யும் மென்பொருள் பற்றி பார்ப்போம்.
ரிக்கவர் செய்யும் வழிமுறைகள்:

* முதலில் கணினியில் வொன்டர்ஷேர் டேட்டா ரிக்கவரி (wondershare data recovery) மென்பொருளை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் வசதியும், கட்டணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் பதிப்பை பயன்படுத்தி சில முறை மட்டுமே தகவல்களை ரெக்கவர் செய்ய முடியும்.

* அடுத்து மென்பொருளில் ஐந்து வெவ்வேறு ஆப்ஷன்கள் திரையில் காணப்படும். இதில் விசார்டு (wizard) ஆப்ஷனை கிளிக் செய்து நெக்ஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். 

* இந்த ஆப்ஷன், பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு தகவல்களை அதன் உண்மையான ஃபைல்களுடன் ரெக்கவர் செய்யும். 

* இனி எம்மாதிரியான ஃபைலினை ரெக்கவர் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். திரையில் புகைப்படம், வீடியோ மற்றும் பல்வேறு இதர தரவுகள் இடம்பெற்றிருக்கும். இதில் நீங்கள் அழித்த குறிப்பிட்ட ஃபைல் வகையை தேர்வு செய்து நெக்ஸ்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* அடுத்து நீங்கள் அழித்த ஃபைல் லொகேஷனை தேர்வு செய்து, நெக்ஸ்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து அழிக்கப்பட்ட தரவுகளை ரெக்கவர் செய்யலாம்.

* இறுதியாக ரெக்கவர் பட்டனை கிளிக் செய்து தரவுகளை பதிவு செய்யும் டிரைவினை தேர்வு செய்ய வேண்டும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget